Posts

தினமும் 3 கப் காப்பி வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் ?

Image
"ஒருநாளைக்குமூன்றுகப்காபிகுடிப்பதுஉங்கள்வாழ்க்கையில்பலஆண்டுகள் அதிகப்படுத்தலாம்” என்று, மெட்ரோ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
ஐரோப்பியமற்றும்அமெரிக்கநடத்தப்பட்ட ஆய்வுகளின்முடிவுகள்காபிகுடிப்பதற்கும், இறப்பதற்கும்இடையேயானஉறவைப் பின்வருமாறுவிவரிக்கிறது.
ஐரோப்பியஆய்வில் 450,000 க்கும்மேற்பட்டோரிடம் செய்த ஆய்வில் காபியை அதிக அளவு மிகஆண்களுக்குபுற்றுநோய்கள்மற்றும்இருதயநோய்கள், செரிமானமற்றும்சுவாசநிலைமைகள்உட்படகாரணிகளில்இருந்து 12 சதவிகிதம்மரணத்தின்ஆபத்தைகுறைக்கின்றனஎன்றுஆராய்ச்சியாளர்கள்கண்டறிந்துள்ளனர்.
இதில் பெண்களுக்குமொத்தம் 7% குறைந்தஆபத்து குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால்அளவுக்கு அதிகமாக காப்பியை குடிப்பதால் அவர்கள் புற்றுநோய்வர்க்கூடியஅபாயத்தைஅவர்கள்பெற்றிருந்தனர்.
இந்தகண்டுபிடிப்புகள்எச்சரிக்கையுடன்விளக்கப்படவேண்டும்ஏனெனில் இந்த ஆராய்ச்சியில் காபிநேரடியாக ஆபத்தைகுறைக்கவல்லது நிரூபிக்கவில்லை. பங்குவகித்தபல்வேறு காரணிகளில் இதுவும் ஒன்றாக கணக்கில்எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
காபிகுடிக்கும் பழக்கம்ஒருஆரோக்கியமான, சமச்சீரானஉணவுபழக்கமாகஇருக்கலாம். தற்போதைய மருத்துவ வழிகாட்டுதல்களின்படி …

மஞ்சள் கலந்த வெண்ணீரை குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்

Image
இந்திய மக்களின் சமையலறைகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் பிரபலமான மஞ்சள் (Curcuma longa)அதன் மருத்துவ தன்மைக்காக மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் அதன் காரத்தன்மை, மனம், பொன்நிறம் போன்ற குணங்களால் உலக மக்கள் அனைவரும் விரும்பக்கூடிய பொருளாக இருந்து வருகிறது.


அது மட்டுமன்றி மஞ்சளில் புரதசத்து, நார்சத்து, வைட்டமின் சி,ஈ, கே, பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து, செம்பு,இரும்புச்சத்து, மேக்னீஷியம் மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்து காணப்படுவதால் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

1/ புற்று நோய் வராமல் தடுக்கும் ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயை தடுக்க கூடிய ஆற்றலும் வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ள் புற்று நோயை வளர விடாமல் தடுக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு என்றும், கதிர்வீச்சால் தூண்டப்பட்டு வரும் கட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்க கூடியது மஞ்சள் என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2/மூட்டு வலிகளிலிருந்து நிவாரணம் தரும் மஞ்சளின் நோய் எதிர்ப்பு ஆற்றல்அழற்சி ,கீல்வாதம்மற்றும்முடக்குவாதம்ஆகியவற்றிற்குசிகிச்சையளிப்பதற்குபெரிதும்உதவுகின்றன. கூடுதலாக, மஞ்சளின்ஆக…

அறிவியல் கண்டுபிடிப்புக்கள்: A வரிசை

Image
ஏர் பிரேக்: ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், யு.எஸ்.ஏ. : 1911.ஏர் கண்டிஷனிங்: வில்லிஸ் கேரியர்,U.S.A.1911.விமானம்: என்ஜின் இயங்கும், வில்ர்பு அண்ட் ஆர்வில் ரைட், யு.எஸ்.ஏ., 1903.ஏர்ஷிப்: ஹென்றி கிஃப்பார்ட், பிரான்ஸ், 1852; பெர்டினாண்ட் வோன் செப்பெலின், ஜெர்மனி, 1900.

ஆண்டிபயாடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்): லூயிஸ் பாஸ்டூர்,ஜூல்ஸ்-பிரான்சுவாஸ் ஜுபெர்ட், பிரான்ஸ், 1887;


(பென்சிலின் கண்டுபிடிப்பு) அலெக்சாண்டர் பிளெமிங், ஸ்காட்லாந்து, 1928.ஆண்டிசெப்டிக்: (அறுவை சிகிச்சை) ஜோசப் லிஸ்டர், இங்கிலாந்து, 1867.


ஆஸ்பிரின்: டாக்டர் ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன், ஜெர்மனி, 1899.அணு: (அணுசக்தி மாதிரி) ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், இங்கிலாந்து, 1911.அணு அமைப்பு: எர்னஸ்ட் ரூதர்போர்ட், இங்கிலாந்து, 1911 &  நீல்ஸ் போர், டென்மார்க், 1913. ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்): டான் வெட்ஸெல், யு.எஸ்.ஏ., 1968.
ஆட்டோமொபைல்: (combustion engine, 250 rmp) கார்ல் பென்ஸ், ஜெர்மனி, 1885;(முதன்முதலாக  நடைமுறையில் ஓட்டக்கூடிய உயர்ந்த உள் எரி பொறி இயந்திரம், 900 rpm) கோட்லிப் டைம்லர், ஜெர்மனி, 1885;(முதல் உண்மையான ஆட்டோமொபைல், மோட்டா…

கரையான்களுக்கு பார்வை இல்லை !

Image
எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த கட்டிடத்தைப் போல கட்டப்பட்ட கறையான் புற்று இந்த சிறிய படைப்புகளால் கட்டப்பட்டது. ஆயினும் எந்தவித தவறுமின்றி இந்த புற்றுக்களை கறையான்கள் வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி கட்டுகின்றன. நாம் படத்தில் காண்பது போன்று இந்த புற்று ஒன்றல்ல பல.
 இளம்குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை, கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம், மற்றும் ராணியின் அறை என பல சிறிய மற்றும் பெரிய பிரிவுகளைக் கொண்டதுதான் கறையான் புற்று. புற்றுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்யேக குளிர்ந்த காற்றோட்ட வசதி  மிக மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்று தேவை. 

எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷன நிலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளிர்ந்த நிலையில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது. அவ்வாறு இல்லையெனில் உஷ்ணத்தின் காரணமாக கறையான்கள் உயிரிழக்க நேரிடும். எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களிள் உட்புறம் காற்று ப…

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

Image
1. சர்க்கரை நோய் என்றால் என்ன? முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்று பார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது.
க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம். 2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்? பல காரணங்களால் இது நிகழலாம். …

சோப் மாயாஜாலம்

Image
தேவையான பொருள்கள்:

• ஒரு தட்டு போன்ற கிண்ணம் (சாசர்)
• சிறிதளவு பால்
• உணவில் உபயோகிக்கும்  வண்ணம் (நான்கு வெவ்வேறு வண்ணங்கள்)
• சோப்பு (திரவ சோப்பு எனில் நல்லது)

செய்முறை:

1. சாசரில் பாலை ஊற்றி வைக்கவும்

2. வண்ணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு சொட்டுக்கள் பாலின் மையப்பகுதியில் சிறிது சிறிது இடைவெளி விட்டு விடவும்.

(இந்த வண்ணங்கள் நம் பகுதிகளில் பவுடராகவே கிடைக்கின்ற படியால் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக்  ஒரு சிறிய ஸ்பூனில் போட்டு சில துளிகள் தண்ணீர் விட்டு குளப்பிக் கொண்டு ஒரு குச்சி அல்லது ஸ்பூனை கொண்டு ஒரு சொட்டு விடவும் )

3. பிறகு திரவ சோப்பை எடுத்து ஒரு சொட்டு அந்த வண்ணங்களுக்கு நடுவில் விடவும்.

பிறகு நடக்கும் அற்ப்புதத்தை  பாருங்கள் !

சோப்புத்துளி பட்டவுடன் பாலின் மேற்ப்பரப்பு அற்ப்புதமான  வண்ணக்கலவையாகி ஒரு வண்ணச் சுருளாக  மாறி  நகர்வதை காணலாம்.

காரணிகள்:

திரவங்களில் மேற்ப்பரப்பில் ஏற்ப்படும் புறப்பரப்பு விசையால் (Surface Tension) ஒன்றாக ஈர்க்கப்பட்டு  இருக்கும். இது பாலின் மேற்ப்பரப்பின் சருகு போல் செயல்பட்டு பாலை ஒரு குட்டையில் இருப்பதுபோலாக்குகிறது.

சோப்புத்துளி பாலில் …

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத 6 செயல்கள்

Image
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத 6 செயல்கள்
சாதாரணமாக சாப்பிட்டவுடன் நாம் செய்யும் செயல் ஹாயாக சோபா அல்லது கட்டில் மீது சாய்ந்து கொண்டு ரெஸ்ட் எடுப்பது. ஆனால் இது நாம் செய்யக்கூடாத மிகப்பெரும் தவறாக கூறப்படுகிறது.
இப்படி சொன்னவுடன் ”காலம் காலமாக நம் பெரியோர்கள் செய்வது இதுதானே ! அவர்கள் நன்றாகத்தானே இருந்தார்கள் !” என்று சப்பை கட்டு கட்டுபவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்,
நம் முன்னோர்கள் உண்ட உணவு, உடல் உழைப்பு, வாழ்க்கை முறையையா நாம் கடைப்பிடிக்கிறோம் ?
எனவே வீண் ஊகங்களை விலக்கி விட்டு படித்து பயன் என்றால் கடைப்பிடிக்கலாம் !1/ புகைப்பிடித்தல்:
சாதரணமாக புகைப்பிடிப்பதே அபாயம், இதில் சாப்பிட்டவுடன் புகைப்பிடிப்பது என்பதைப்பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி குடித்துத்தான் செத்து மடிவேன் ! என்பவர்கள் குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதித்து குடிக்கலாம். உணவு செரிமானம் நடைபெற அதிக அளவு ஆக்ஸிசன் தேவைப்படும். புகைபிடிக்கும் போது பெருமளவு ஆக்ஸிசன் வீணாகி விடுவதால் ஜீரணக் கிரியை நடைபெறுவது கடினமாகிறது. மேலும் சாப்பிட்ட உடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிக்ரெட்கள் பிடிப்பதற்கு சமமாக இருப்பதா…