Posts

Showing posts from March, 2018

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

Image
1. சர்க்கரை நோய் என்றால் என்ன? முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்று பார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது.
க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம். 2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்? பல காரணங்களால் இது நிகழலாம். …

சோப் மாயாஜாலம்

Image
தேவையான பொருள்கள்:

• ஒரு தட்டு போன்ற கிண்ணம் (சாசர்)
• சிறிதளவு பால்
• உணவில் உபயோகிக்கும்  வண்ணம் (நான்கு வெவ்வேறு வண்ணங்கள்)
• சோப்பு (திரவ சோப்பு எனில் நல்லது)

செய்முறை:

1. சாசரில் பாலை ஊற்றி வைக்கவும்

2. வண்ணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு சொட்டுக்கள் பாலின் மையப்பகுதியில் சிறிது சிறிது இடைவெளி விட்டு விடவும்.

(இந்த வண்ணங்கள் நம் பகுதிகளில் பவுடராகவே கிடைக்கின்ற படியால் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக்  ஒரு சிறிய ஸ்பூனில் போட்டு சில துளிகள் தண்ணீர் விட்டு குளப்பிக் கொண்டு ஒரு குச்சி அல்லது ஸ்பூனை கொண்டு ஒரு சொட்டு விடவும் )

3. பிறகு திரவ சோப்பை எடுத்து ஒரு சொட்டு அந்த வண்ணங்களுக்கு நடுவில் விடவும்.

பிறகு நடக்கும் அற்ப்புதத்தை  பாருங்கள் !

சோப்புத்துளி பட்டவுடன் பாலின் மேற்ப்பரப்பு அற்ப்புதமான  வண்ணக்கலவையாகி ஒரு வண்ணச் சுருளாக  மாறி  நகர்வதை காணலாம்.

காரணிகள்:

திரவங்களில் மேற்ப்பரப்பில் ஏற்ப்படும் புறப்பரப்பு விசையால் (Surface Tension) ஒன்றாக ஈர்க்கப்பட்டு  இருக்கும். இது பாலின் மேற்ப்பரப்பின் சருகு போல் செயல்பட்டு பாலை ஒரு குட்டையில் இருப்பதுபோலாக்குகிறது.

சோப்புத்துளி பாலில் …

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத 6 செயல்கள்

Image
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத 6 செயல்கள்
சாதாரணமாக சாப்பிட்டவுடன் நாம் செய்யும் செயல் ஹாயாக சோபா அல்லது கட்டில் மீது சாய்ந்து கொண்டு ரெஸ்ட் எடுப்பது. ஆனால் இது நாம் செய்யக்கூடாத மிகப்பெரும் தவறாக கூறப்படுகிறது.
இப்படி சொன்னவுடன் ”காலம் காலமாக நம் பெரியோர்கள் செய்வது இதுதானே ! அவர்கள் நன்றாகத்தானே இருந்தார்கள் !” என்று சப்பை கட்டு கட்டுபவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்,
நம் முன்னோர்கள் உண்ட உணவு, உடல் உழைப்பு, வாழ்க்கை முறையையா நாம் கடைப்பிடிக்கிறோம் ?
எனவே வீண் ஊகங்களை விலக்கி விட்டு படித்து பயன் என்றால் கடைப்பிடிக்கலாம் !1/ புகைப்பிடித்தல்:
சாதரணமாக புகைப்பிடிப்பதே அபாயம், இதில் சாப்பிட்டவுடன் புகைப்பிடிப்பது என்பதைப்பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி குடித்துத்தான் செத்து மடிவேன் ! என்பவர்கள் குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதித்து குடிக்கலாம். உணவு செரிமானம் நடைபெற அதிக அளவு ஆக்ஸிசன் தேவைப்படும். புகைபிடிக்கும் போது பெருமளவு ஆக்ஸிசன் வீணாகி விடுவதால் ஜீரணக் கிரியை நடைபெறுவது கடினமாகிறது. மேலும் சாப்பிட்ட உடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிக்ரெட்கள் பிடிப்பதற்கு சமமாக இருப்பதா…

அறிவியல் வினாடி வினா – விண்வெளி

Image
1 . சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளின் பெயர்  என்ன? 2 . நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிக பெரிய 2 வது கோளின் பெயர் என்ன? 3 . நமது சூரிய மண்டலத்தில் உள்ள வெப்பமான கோள் என்ன?

எளிய மின்காந்த மோட்டார்

Image
20 ஜூன் 2017/EBRAHIM SHA
இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருப்பது சக்கரத்தில்தான் அதாவது வாகனங்களால்தான். அந்த வாகனங்களை இயக்க வைக்க அல்லது சர்க்கரங்களை சுழல வைக்க மோட்டார் என்ற சாதனம் அவசியமாகிறது. இதனால்தான் மோட்டார் கார் என்றே அழைக்கப்படுகிறது. வாகனங்களுக்கு மட்டுமின்றி அனைத்து விதமான தொழிற்சாலைகள், மின் உற்பத்தி போன்ற அனைத்திலும் மோட்டார் என்பதுதான் அடிப்படை. அத்தகைய மோட்டாரின் அடிப்படை என்ன எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றிய விளக்கம்தான் இந்த பரிசோதனை. ஒரு மோட்டாருக்கு மின்சாரமும் காந்த விசையும் அடிப்படை தேவைகளாகும். காந்த விசை அல்லது சக்தியை நேரடியாக காந்தத்தின் மூலமாகவோ அல்லது மின்சாரத்தை கொண்டோ உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டாவதை மின்காந்த சக்தி என்று அழைக்கிறோம். இங்கு நாம் உருவாக்க  இருப்பது நேர் மின்சாரத்திம் மூலம் இயங்கும் நேர் மின்சார மோட்டார் ஆகும். (DC Motor) நேர் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்களில் பெரும்பாலும் காந்தம் பொருத்தப்பட்டு இருக்கும். அதே நேரத்தில் காந்தம் இல்லாமலும் செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. இதன் அடிப்படை சக்தியான  மின்காந்தம் பற்றி தெரிந்து கொண்ட…

பூமிக்குள் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?

Image
/EBRAHIM SHAதொகு விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது. இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர். “நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை” என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன. ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். பெரு நாட்டில் உள்ள செம்பு சுரங்கம் Toquepala Copper Mine, Peru (பட உதவி: wired.com) திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை. மேலும…