சோப் மாயாஜாலம்





தேவையான பொருள்கள்:

• ஒரு தட்டு போன்ற கிண்ணம் (சாசர்)
• சிறிதளவு பால்
• உணவில் உபயோகிக்கும்  வண்ணம் (நான்கு வெவ்வேறு வண்ணங்கள்)
• சோப்பு (திரவ சோப்பு எனில் நல்லது)

செய்முறை:

1. சாசரில் பாலை ஊற்றி வைக்கவும்

2. வண்ணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு சொட்டுக்கள் பாலின் மையப்பகுதியில் சிறிது சிறிது இடைவெளி விட்டு விடவும்.

(இந்த வண்ணங்கள் நம் பகுதிகளில் பவுடராகவே கிடைக்கின்ற படியால் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக்  ஒரு சிறிய ஸ்பூனில் போட்டு சில துளிகள் தண்ணீர் விட்டு குளப்பிக் கொண்டு ஒரு குச்சி அல்லது ஸ்பூனை கொண்டு ஒரு சொட்டு விடவும் )

3. பிறகு திரவ சோப்பை எடுத்து ஒரு சொட்டு அந்த வண்ணங்களுக்கு நடுவில் விடவும்.

பிறகு நடக்கும் அற்ப்புதத்தை  பாருங்கள் !

சோப்புத்துளி பட்டவுடன் பாலின் மேற்ப்பரப்பு அற்ப்புதமான  வண்ணக்கலவையாகி ஒரு வண்ணச் சுருளாக  மாறி  நகர்வதை காணலாம்.

காரணிகள்:

திரவங்களில் மேற்ப்பரப்பில் ஏற்ப்படும் புறப்பரப்பு விசையால் (Surface Tension) ஒன்றாக ஈர்க்கப்பட்டு  இருக்கும். இது பாலின் மேற்ப்பரப்பின் சருகு போல் செயல்பட்டு பாலை ஒரு குட்டையில் இருப்பதுபோலாக்குகிறது.

சோப்புத்துளி பாலில் பட்ட நொடியில் பாலின் புறப்பரப்பு விசையை உடைபடுகிறது. புறப்பரப்பு விசை உடைந்ததன் விளைவால் பாத்திரதின் ஓரத்தில் இருந்த புறப்பரப்பு விசை நடுவில் உள்ள பாலை ஓரத்திற்க்கு இழுக்கிறது. ஓரங்களை நோக்கி நகரும் பால் தன் மேல் இருக்கும் வண்ணத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டு செல்கிறது.

சோப்பின் தாக்கம் இருக்கும் வரை வண்ணம் நகர்ந்து கொண்டே இருப்பதை காணலாம்.

சோப்பின் இந்த புறப்பரப்பு விசையை (Surface Tension) உடைக்கும் தன்மைதான் அதண் செயலாற்றல்களின் முக்கிய காரணியாக செயல்படுகிறது.

Source & Photo courtesy: CSIRO

காப்பி, பேஸ்ட் செய்யும் சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

காப்பி பேஸ்ட் செய்வதை விட இத்தளத்தின் லின்ங்க்கை ஷேர் செய்தீர்களானால் அவர்களுக்கு தேவையான பிற செய்திகளையும் படிக்கும் வாய்ப்பு ஏற்படும், நன்றி

கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் காமெண்ட் பண்ணுங்க !

மத்தவங்களுக்கு ஷேர் பண்ண கீழுள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க !

Comments

Popular posts from this blog

மாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள்:

மஞ்சள் கலந்த வெண்ணீரை குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத 6 செயல்கள்