Posts

Showing posts from April, 2018

மஞ்சள் கலந்த வெண்ணீரை குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்

Image
இந்திய மக்களின் சமையலறைகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் பிரபலமான மஞ்சள் (Curcuma longa)அதன் மருத்துவ தன்மைக்காக மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் அதன் காரத்தன்மை, மனம், பொன்நிறம் போன்ற குணங்களால் உலக மக்கள் அனைவரும் விரும்பக்கூடிய பொருளாக இருந்து வருகிறது.


அது மட்டுமன்றி மஞ்சளில் புரதசத்து, நார்சத்து, வைட்டமின் சி,ஈ, கே, பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து, செம்பு,இரும்புச்சத்து, மேக்னீஷியம் மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்து காணப்படுவதால் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

1/ புற்று நோய் வராமல் தடுக்கும் ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயை தடுக்க கூடிய ஆற்றலும் வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ள் புற்று நோயை வளர விடாமல் தடுக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு என்றும், கதிர்வீச்சால் தூண்டப்பட்டு வரும் கட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்க கூடியது மஞ்சள் என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2/மூட்டு வலிகளிலிருந்து நிவாரணம் தரும் மஞ்சளின் நோய் எதிர்ப்பு ஆற்றல்அழற்சி ,கீல்வாதம்மற்றும்முடக்குவாதம்ஆகியவற்றிற்குசிகிச்சையளிப்பதற்குபெரிதும்உதவுகின்றன. கூடுதலாக, மஞ்சளின்ஆக…

அறிவியல் கண்டுபிடிப்புக்கள்: A வரிசை

Image
ஏர் பிரேக்: ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், யு.எஸ்.ஏ. : 1911.



ஏர் கண்டிஷனிங்: வில்லிஸ் கேரியர்,U.S.A.1911.



விமானம்: என்ஜின் இயங்கும், வில்ர்பு அண்ட் ஆர்வில் ரைட், யு.எஸ்.ஏ., 1903.



ஏர்ஷிப்: ஹென்றி கிஃப்பார்ட், பிரான்ஸ், 1852; பெர்டினாண்ட் வோன் செப்பெலின், ஜெர்மனி, 1900.

ஆண்டிபயாடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்): லூயிஸ் பாஸ்டூர்,



ஜூல்ஸ்-பிரான்சுவாஸ் ஜுபெர்ட், பிரான்ஸ், 1887;


(பென்சிலின் கண்டுபிடிப்பு) அலெக்சாண்டர் பிளெமிங், ஸ்காட்லாந்து, 1928.



ஆண்டிசெப்டிக்: (அறுவை சிகிச்சை) ஜோசப் லிஸ்டர், இங்கிலாந்து, 1867.


ஆஸ்பிரின்: டாக்டர் ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன், ஜெர்மனி, 1899.



அணு: (அணுசக்தி மாதிரி) ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், இங்கிலாந்து, 1911.



அணு அமைப்பு: எர்னஸ்ட் ரூதர்போர்ட், இங்கிலாந்து, 1911 &  நீல்ஸ் போர், டென்மார்க், 1913.



 ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்): டான் வெட்ஸெல், யு.எஸ்.ஏ., 1968.




ஆட்டோமொபைல்: (combustion engine, 250 rmp) கார்ல் பென்ஸ், ஜெர்மனி, 1885;



(முதன்முதலாக  நடைமுறையில் ஓட்டக்கூடிய உயர்ந்த உள் எரி பொறி இயந்திரம், 900 rpm) கோட்லிப் டைம்லர், ஜெர்மனி, 1885;(முதல் உண்மையான ஆட்டோமொபைல், மோட்டா…

கரையான்களுக்கு பார்வை இல்லை !

Image
எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த கட்டிடத்தைப் போல கட்டப்பட்ட கறையான் புற்று இந்த சிறிய படைப்புகளால் கட்டப்பட்டது. ஆயினும் எந்தவித தவறுமின்றி இந்த புற்றுக்களை கறையான்கள் வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி கட்டுகின்றன. நாம் படத்தில் காண்பது போன்று இந்த புற்று ஒன்றல்ல பல.
 இளம்குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை, கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம், மற்றும் ராணியின் அறை என பல சிறிய மற்றும் பெரிய பிரிவுகளைக் கொண்டதுதான் கறையான் புற்று. புற்றுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்யேக குளிர்ந்த காற்றோட்ட வசதி  மிக மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்று தேவை. 

எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷன நிலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளிர்ந்த நிலையில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது. அவ்வாறு இல்லையெனில் உஷ்ணத்தின் காரணமாக கறையான்கள் உயிரிழக்க நேரிடும். எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களிள் உட்புறம் காற்று ப…