Posts

Showing posts from March 22, 2018

எளிய மின்காந்த மோட்டார்

Image
20 ஜூன் 2017/EBRAHIM SHA
இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருப்பது சக்கரத்தில்தான் அதாவது வாகனங்களால்தான். அந்த வாகனங்களை இயக்க வைக்க அல்லது சர்க்கரங்களை சுழல வைக்க மோட்டார் என்ற சாதனம் அவசியமாகிறது. இதனால்தான் மோட்டார் கார் என்றே அழைக்கப்படுகிறது. வாகனங்களுக்கு மட்டுமின்றி அனைத்து விதமான தொழிற்சாலைகள், மின் உற்பத்தி போன்ற அனைத்திலும் மோட்டார் என்பதுதான் அடிப்படை. அத்தகைய மோட்டாரின் அடிப்படை என்ன எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றிய விளக்கம்தான் இந்த பரிசோதனை. ஒரு மோட்டாருக்கு மின்சாரமும் காந்த விசையும் அடிப்படை தேவைகளாகும். காந்த விசை அல்லது சக்தியை நேரடியாக காந்தத்தின் மூலமாகவோ அல்லது மின்சாரத்தை கொண்டோ உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டாவதை மின்காந்த சக்தி என்று அழைக்கிறோம். இங்கு நாம் உருவாக்க  இருப்பது நேர் மின்சாரத்திம் மூலம் இயங்கும் நேர் மின்சார மோட்டார் ஆகும். (DC Motor) நேர் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்களில் பெரும்பாலும் காந்தம் பொருத்தப்பட்டு இருக்கும். அதே நேரத்தில் காந்தம் இல்லாமலும் செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. இதன் அடிப்படை சக்தியான  மின்காந்தம் பற்றி தெரிந்து கொண்ட…

பூமிக்குள் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?

Image
/EBRAHIM SHAதொகு விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது. இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர். “நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை” என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன. ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். பெரு நாட்டில் உள்ள செம்பு சுரங்கம் Toquepala Copper Mine, Peru (பட உதவி: wired.com) திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை. மேலும…

மின்சாரம் என்றால் என்ன ?

Image
மின்சாரம் என்றால் என்ன ?26 மே 2013/EBRAHIM SHA மின்சாரமில்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்க இயலுமா நம்மால் ?! அப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்து விட்ட மின்சாரத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே)மின்னலுக்கு காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் மின்காந்த சக்தியை பெறுகிறது. மின்சாரம் என்பது    நம்மை சூழ்ந்துள்ள இயல்பாக ஏற்படும் ஒரு  ஆற்றலாகும். மனிதர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இதைப்பற்றி அறிந்திருந்தனர். பண்டைய மனிதர்கள் அதை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அதை ஒரு மாயாஜாலாமாக கருதியிருந்தனர். அம்பர் எனப்படும் ஒருவகை பிசினை ஒரு துணியில் தேய்த்து அதை வைக்கோல் துண்டுகள் அருகில் கொண்டு சென்றால் அவற்றை ஈர்ப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்கள் நிலை மின்சாரம் மற்றும் மின்னல் போன்றவற்றில் ஏற்பட்ட  மின்சாரத்தின் விளைவுகளை சுமார் 2500 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்து வைத்துள்ளனர். கி.பி. 1600 –ல் த…

உங்கள் எடை என்ன ?

Image
உங்கள் எடை என்ன ? பட உதவி: easternshoremedicalweightloss.com நீங்கள் சமீபத்தில் உங்கள் எடையை பார்த்திருந்தாலும் இந்த கேள்விக்கு விடையளிப்பது அத்தனை சுலபமில்லை ! ஒரு நாளில் உங்கள் எடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ? மாலையில், ஒரு மணி நேரத்தில் ஏன் பத்து நிமிடங்களில் கூட உங்கள் எடையில் மாற்றம் ஏற்படலாம் !
நமக்கு தெளிவாக தெரிகின்ற உணவு உட்கொள்ளுதல், நீரருந்துதல் போன்றவற்றை தவிர்த்து வேறு பல காரணங்களால் மெதுவாக, நாம் உணர முடியாதவாறு, அடிக்கடி இது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இதை முதன் முதலாக சுமார் 300 வருடங்களுக்கு கண்டுபிடித்தவர் சாண்டோரியஸ்* என்பவராவார். அவர் ஒரு பெரிய தராசு ஒன்றை தாயாரித்து அதிலிருந்து கொண்டே தன்னிடம் நிகழும் எடை மாற்றங்களை ஆராய்ந்தார். அதன் முடிவு  மிகவும் ஆச்சரியமிக்கதாக இருந்தது. இதை அறிந்த அவ்வூர் மக்கள் திரளாக அவர் ஆராய்ச்சி கூடத்துக்கு வந்து அவர் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்களை நேரில் கண்டார்கள். அந்த மாற்றங்கள் மதிப்பிடக்கூடியதாக இருந்தது. ஒரு இரவில் ஏறக்குறைய ஒரு கிலோ எடையை இழந்திருந்தார்.
(Image courtesy: bridgemanart.com) ஒருவ…
Image
ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை  ( crystal of nano structured glass)  பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.  இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்).
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான  நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமேஉள்ளது.
நன்றி : myscienceacademy.org

காப்பி, பேஸ்ட் செய்யும் சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

காப்பி பேஸ்ட் செய்வதை விட இத்தளத்தின் லின்ங்க்கை ஷேர் செய்தீர்களானால் அவர்களுக்கு தேவையான பிற செய்திகளையும் படிக்கும் வாய்ப்பு ஏற்படும், நன்றி

செய்தியில்  உங்களுக்கு பிடித்ததையும்,  பிடிக்காததையும்  காமெண்ட் பண்ணுங்க !

மத்தவங்களுக்கு ஷேர் பண்ண கீழுள்ள லிங்க்கை க்ளிக் பண்ணி ஷேர் பண்ணலாம் !

ஃபிலிம் குப்பி ராக்கெட்

Image
வெடி மருந்தில்லாமல் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ராக்கெட் இதோ !

Image courtesy: sciencebob.com 
தேவையான பொருட்கள்:
ஒரு காலி புகைப்பட ஃபிலிம் டப்பா
சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்)
வினிகர் ( வினிகர் டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்)
ஒரு ஐஸ்கிரீம் குச்சி அல்லது தேக்கரண்டி
ஒரு தட்டு, சாசர்அல்லது  தட்டு
கண் பாதுகாப்பு குகண்ணாடி ( சூரிய கண்ணாடி அல்லது பாதுகாப்பு கண்ணாடி)
ஒரு வயது வந்தோர்.

செய்முறை:
கண்கள் பாதுகாப்பிற்காக கண் கண்ணாடியை அணிந்து கொள்ளவும்.
ஃபிலிம் டப்பாவில்  5 மில்லி மீட்டர் அளவு ஆழத்திற்கு  வினிகரை ஊற்றவும்.
Image courtesy: sites.google.com தேக்கரண்டி அல்லது ஐஸ்கிரீமை குச்சியை பயன்படுத்தி சமையல் சோடாவை அதில் இட்டு உடனே மூடியை இறுக்கமாக மூடியை மூடவும்.
உடனே தட்டின் மேல் தலைகீழாக அதாவது ஃபிலிம் டப்பாவின் மூடி தட்டின் மேல் படும்படி வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளி நின்று கவனிக்கவும்.  தட்டின் மேற்பரப்பு சமமாக இருத்தல் அவசியம்.
ஃபிலிம் குப்பி ராக்கெட்

சில வினாடிகளில் உங்கள் ஃபிலிம் டப்பா  ராக்கெட் சத்தத்துடன் வெடித்து டப்பா மேலெலும்பி செல்வதை காண்ப…

உலக மகா சோம்பேரிகளுக்காக !

Image
வாழ்க்கையை எளிதாக்குகிறோம் என்ற பெயரில் மக்களை சோம்பேரிகளாக்கும் பொருள்கள் நாளுக்கு நாள் மார்கெட்டு வந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட பொருட்களில் உலக மகா சோம்பேறிகளுக்கான பொருட்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம் !
ஐஸ் கிரீமை நக்கி திங்க சோம்பல் படும் சோம்பேரிகளுக்கு ஐஸ் கோனை வைத்தால் தானாக சுற்றும் கோன் வைண்டர்!
வெண்ணையை துண்டாக நறுக்க சிரமப்படும் சோம்பேரிகளுக்கு வெண்ணை பார் !
பிரட்டை எடுத்து அதில் ஜாமை, பட்டரை  தேய்த்து திண்ண சிரமப்படும் மேதாவிகளுக்கு  சேனில் சாண்ட் விச் !
வாழைப்பழத்தை கடித்து திண்ண அல்லது துண்டாக வெட்ட சிரமப்படும் சிந்தனைவாசிகளுக்கு வாழைப்பழ சிலைசர்!

நீளமான நூடுல்ஸை சிரமப்பட்டு எடுக்க அல்லது உறிஞ்ச சிரமப்படும் செல்வந்தர்களுக்கு மோட்டரைஸ்டு ஸ்போர்க் ஸ்பூன் !
படுத்துக்கொண்டே டாப் அல்லது ஸ்மார்ட் போனை சிரமமில்லாமல் பார்க்க உதவும் சிறப்பு கண் கண்ணாடி !
கேனை சாய்த்து ஜுஸை ஊற்றி குடிக்க சிரமப்படும் மக்களுக்காக சாய்க்கும் வசதிகொண்ட கேன் ஸ்டாண்ட்!

சாக்ஸ் மாட்ட கழட்ட  சிரமப்படும்  உழைப்பாளிகளுக்கு சாக்ஸ் மாட்டி !
டேபிளில் சாய்ந்து தூங்க வசதியாக டை தலையணை !
 செருப்பு போட…

வியக்க வைக்கும் உண்மைகள் -11

Image
Image Courtesy:guardian.co.uk ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில்  92.5% வெள்ளி தானாம்  !?
Image Courtesy: starseva.com தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுதற்க்கு முன்னால் சிகரெட் லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
Image Courtesy:flyproducoes.com ஈபிள் கோபுரம் உயரம்  குளிர்காலத்தில் 6 அங்குலங்கள் குறைந்து விடும்.
Image courtesy: commercial-lamps.co.uk பத்துக்கு ஒன்பது பேர்  மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர்  தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர்  ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.
Image Courtesy: musicnfilms.com பிறந்தநாள் வாழ்த்து பாடலுக்கு  காப்புரிமை (copyright) உள்ளது .


காப்பி, பேஸ்ட் செய்யும் சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
காப்பி பேஸ்ட் செய்வதை விட இத்தளத்தின் லின்ங்க்கை ஷேர் செய்தீர்களானால் அவர்களுக்கு தேவையான பிற செய்திகளையும் படிக்கும் வாய்ப்பு ஏற்படும், நன்றி

செய்தியில்  உங்களுக்கு பிடித்ததையும்,  பிடிக்காததையும்  காமெண்ட் பண்ணுங்க !

மத்தவங்களுக்கு ஷேர் பண்ண கீழுள்ள லிங்க்கை க்ளிக் பண்ணி ஷேர் பண்ணலாம் !

கடல்களும், ஆழ்கடல்களும்

Image
Image Courtesy: oceanexplorer.noaa.gov அமெரிக்காவின் கொலோரடாவிலுள்ள பவுல்டர் நகரில் அமைந்திருக்கும் கொலோரடா பல்கலைக்கழக்கத்தில் புவியியல் அறிவுகளின் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் வில்லியம் ஹே அவர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். அவர் முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமியிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசன்ஸியல் பள்ளியிலுள்ள கடல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் தீன் ஆகவும் முன்பு பணியாற்றியுள்ளார்.  திருக்குர்னிலும் ஹதீதிலும்
காணப்படும் அறிவியல் அத்தாட்சிகள் குறித்து நாம் செய்யும் ஆராய்ச்சி தொடர்பான ஒரு சிலவற்றை நமக்குக் அவர் காண்பிக்கும் வகையில் அவருடன் ஒரு கடல் பயணம் செய்தோம். கடலின் மேற்பரப்பு, மேல் கடலுக்கும் கீழ் கடலுக்கும் இடையிலுள்ள தடுப்பு, பெருங்கடல் தரை மற்றும் கடல் புவியியல் ஆகியன பற்றி அவரிடம் பல கேள்விகள் கேட்டோம். பல்வேறு வகையான கடல்களுக்கும் மற்றும் நல்ல நீர் நதிகளுக்கும் இடையேயுள்ள கலவைநீர் தடுப்புக்கள் பற்றியும் பேராசிரியர் ஹே அவர்களிடம் நாம் கேட்டோம். நாம் கேட்ட ஒவ்வொன்றிற்கும் விபரமான பதிலை அன்புடன் அவர் வழங்கினார்.
Fig. 13.1 பல்வேறு வி…